ரசிகன்

விண்ணுக்கும்
மண்ணுக்கும் காதலா...?
புறப்பட்டு விட்டார்கள் தூதுவர்கள்
துளிதுளியாய்...
"மழை"

நிம்மதி ஊசி நூல் தேடும்
கந்தல் ஆடைகளின்
"கனத்த" கோட்டை
"முதியோர் இல்லம்"

சாகாவரம் பெற
தினம் தினம்
செத்துப் பிழைக்கும்
பீனிக்ஸ் பறவை
"சமாதானம்"

மண்ணாகிப் போகும் வரை
மனம் புண்ணாகி
புன்னகை வீசும்
கம்பீரத் தென்றல்
"பெண்"

நீலப்பட்டாடைக்கு
நூல் தேவையோ..?
இதோ பஞ்சு மூட்டைகளின்
நெஞ்சை அள்ளும் பவனி
"மேகங்களாய்..."

விற்க இயலாத
வீரிய விதை
விநியோகம் செய்வதற்கு
இங்கு பலருக்கு பஞ்சம்
"புன்னகை"

எழுதியவர் : ஸ்ரீநாத் (8-Jan-14, 11:26 pm)
Tanglish : rasigan
பார்வை : 98

மேலே