தூங்கிவிட்ட நினைவுகள்

தூங்கிவிட்ட நினைவுகள் !
திரவியம் தேட திரை கடல் ஓடு
அன்று சொன்ன முது மொழி
கஷ்டங்களை களை எடுக்க
இளமையை மூலதனமாக்கி
நம்மில் பலர் வாழ்வாதாரம்
இன்னும் வளைகுடா நாடுகளில்
மனைவியை பிரிந்து
பிள்ளைகளை மறந்து
உறவுகளை துறந்து
உரிமைகளை இழந்து
வருடங்களை தொலைத்து
வாழ்கை முதுமையாகி ...........
இவற்றை எல்லாம் சுமந்து
குடும்ப நிலையை உயர்த்த
பாலைவன சுடு மணலில்
படும் வேதனை
நிற்காமல் தொடரும் இவர்கள்
கடின உழைப்பு
வளைகுடா நாடு !
தூங்காத உழைப்பு !
தூங்கி விட்ட கனவுகள் !!
ஸ்ரீவை.காதர்.