நடந்தான் ஒருவன் நடக்கிறான் இன்றும்

நடந்தனர் பலரும் இந்த வாழ்வினில்
தன நலம் பேண காலையும் மாலையும்
உண்டனர் உயிர் வாழ்ந்திருந்தனர்
நடந்தனர் மறைந்தனர் சுவடின்றியே !
தன்னலம் குடும்ப நலம் கருதா ஒருவன்
தன் மண்நலம் எண்ணி நெடிது நடந்தான்
இன்னுயிர் தன்னையும் மண்ணுக்கே தந்தான்
இன்றும் இதோ நடக்கிறான் நம் நினைவினில் !
உண்மைக்காக அவன் நடந்தான்
உப்புக்காக அவன் நடந்தான்
உணர்வினில் சுதந்திரக் காற்றேந்தி நடந்தான்
உண்மையில் இந்த பூமியில் அவனே நடந்தான் !

எழுதியவர் : Akramshaaa (15-Jan-14, 8:51 am)
பார்வை : 51

மேலே