மதம் மனிதன் மண்
மதம் ஏற்றால் விழா ரெண்டுதான்
மனம் ஏற்றால் விழா ஒன்றுதான்
ஓணம் கேரளத்தில் எல்லோருக்கும்
ஒன்றுதான்
அது மிகவும் நன்றுதான்
பானைக்கு ஏது மதம்
யார் தப்பினாலும் உருவாகும்
நெருப்பிற்கு ஏது மதம்
யார் எரித்தாலும் சூடு தரும்
நீரிற்கு ஏது மதம்
பானையிலிட்டால் சூடாகும்
அரிசிக்கு ஏது மதம்
கொதிக்கும் நீரிலிட்டால் சோறாகும்
சோற்றிற்கு ஏது மதம்
யார் வயிற்றிலும் அது உணவாகும்
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
ஏற்றாலும் ஏற்காவிட்டாலும்
இறுதியில் எல்லோரும் தழுவும் மதம்
ஒன்னுதான் அது மண்ணுதான் !
-----கவின் சாரலன்

