எது சிறந்த நட்பு

*தூரங்களால் தனிமைபடாத
யுகங்களால் பிரிக்கபடாத,

**பேசாத போது உள்ளங்களால் பேசியும்
பார்க்காத போது மனக்கண்ணால் பார்த்தும்,

***அழும் போது கண்ணீரை துடைத்தும்
மகிழும் போது சேர்ந்து மகிழ்ந்தும்,

****வாழும் போது தோள் கொடுத்தும்
வீழும் போது கை கொடுத்தும்,

*****இருக்கும் வரை இதயத்திலும்
இறந்த பின் சுவாசத்திலும்,

வாழ்வாங்கு வாழ்வதுதான்
சிறந்த நட்பு !

எழுதியவர் : கண்மணி (16-Jan-14, 4:03 pm)
Tanglish : ethu sirantha natpu
பார்வை : 164

மேலே