வெற்றுக் காரணம்
நொடியில்
காதலித்து
நிமிடங்களில்
மனம் மாறி
மணிகளில் புரிந்து
உணர்ந்து, உயிர்த்து
அடுத்த மணியில்
காசோடு பிரிந்து போகும்
யுவதி,
எனக்கென்னவோ
இருந்த ஒவ்வொரு
மணித் துளியிலும்
காதலால்,
நிரம்பி நிரம்பியே
இருந்தாள் என்றே நம்புகிறேன்....
விவாகரத்துக்காக
காத்திருப்பவர் கவனிக்க ....
குளியலைறையில்
அவள்
விட்டுச் சென்ற
பொட்டின் அடையாளம்
வெற்றுக் காரணம் அல்ல....