விழுங்கித் தொலைத்த மானுடம்

"எங்கோ எதற்கோ விழுங்கித் தொலைத்த மானுடம்..

இரந்து இரந்து கொடுக்கத் திராணியின்றி வாங்கத் துணிந்த மானுடம்..

களவு செய்து கபடமாடி
கற்பு பறித்து; தொலைத்து;
கயவரோடு கூடி காலம் போக்கும் மானுடம்..

எடுத்து வீசத் துணியாத
விட்டு ஒழிக்க இயலாத
உடலை -பிடுங்கியும் புலம்பும்
பிரிந்தும் பிறரை நோவும்
சுயநல மானுடம்...

பகுத்துப் பாராத கேள்புத்தி -
அறுத்தெறிய முடியா ஆசைகள்
பிரித்துத் தர இயலாத மனசு
எடுத்துக் கொடுக்க வக்கின்றியும்
தனக்கு மட்டுமே ஓலமிடும் மானுடம்..

ஆறடி மிஞ்சாத மண் தின்று
காலடி பதியாத வாழ்க்கைக்கு
நோயிற்கும் பேயிற்கும் பயந்து
யாருக்கும் பயனின்றி - போகும் மானுடமே..

காலம் மென்று மென்று விழுங்கி விதைத்த விதைப்பில்
வாழ்ந்த அடையாளமின்றி மாளும் மானுடமே.. மானுடமே..

எல்லாம் ஒழ், எல்லாம் அற்
எஞ்சியிருக்கும் மனிதம் காக்கவேணும் "சுயநலம் குறைத்து வாழ்"
என்று சொல்ல -
எனக்கென்ன உரிமையுண்டோ; உன்னிடத்தில் மானுடமே!!

எழுதியவர் : Akramshaaa (18-Jan-14, 6:35 am)
பார்வை : 65

மேலே