நீங்க பேசுங்க பாஸ்

பேஸ் புக்ல ப்ரண்ட் ரிக்வெஸ்ட் அக்சப்ட் பண்ணி, இல்லை ரிக்வெஸ்ட் கொடுத்து நண்பர்களா ஆகிக்கிறோம்னுதானே நீங்க நினைக்கிறீங்க....

அதான் இல்லை....

ஒவ்வொரு ரிக்வெஸ்ட் அல்லது அக்சப்ட்டும் பண்ணின பின்னாடி நீங்க பலருக்கு தொண்டர்களா மாறிடுறீங்க, சிலருக்கு வாசகர்களா, இன்னும் சிலருக்கு ரசிகர்களா...வேறு சிலருக்கு சிஷ்யர்களா,

ஆக மொத்தம் கை தட்டி விசிலடிக்கிற கூட்டமா நாம மாறியே ஆகணும் பாஸ்.

# இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள், மதவாதிகள், தத்துவ மேதைகள், வியாபாரிகள், இன்ன பிற தேவ தூதர்கள், கடவுளர்கள், இவர்களுக்கிடையே......

உணர்வுகளை,அனுபவங்களை, அன்றாட நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் சாதாரண பொதுமக்கள்..அகப்பட்டு சிக்கிக் கொண்டு சொல்ல வருவதைச் சொல்ல முடியாமல் வேடிக்கைப் பார்க்கும் கூட்டமாய் மாறிக் கொண்டிருப்பதுதான்...தற்போதைய நவீன சமூக இணைவு தளங்களுக்களின் நிலை.

நிறைய பேர்கள் தங்களின் அனுபவங்களை, உணர்வுப் பூர்வமான பகிர்தல்களை செய்யத் தயங்குகிறார்கள்.....இந்த இடம் சாதாரணர்களுக்கான இடமாய் இல்லாமல்....

சோ கால்ட் வி.ஐ.பிகள் எனப்படும் அதிகார வர்க்கத்தின் களமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில்....இங்கே வியாபாரிகளும், அரசியல்வாதிகளும், மதப்பிரச்சாரகர்களும்....இலக்கியவாதிகளுமே நிரம்பி இருக்கப் போகிறார்கள்....

அவர்களை வேடிக்கைப் பார்க்கும் கூட்டமாக நாம் மாறிப் போய் பொதுவான பார்வைகள் இல்லாமல் சார்புத்தன்மையோடு இந்த ஊடகம் மாறிப் போகும்...!

* * *

நமக்கெல்லாம் வாய் பார்க்கவும், வாக்களிக்கவும் மட்டுமே தெரியும் என்ற அதிகார வர்க்கத்தின் எண்ணத்தை தகர்த்தெறிவோம்........

சமூக இணைவுத்தளங்களை பொது மக்கள் கருத்துக்களை வலுவாக பதிவு செய்யும் களமாக மாற்றுவோம்.....

அதனால....


நீங்க பேசுங்க பாஸ்...! #

எழுதியவர் : Dheva. S (18-Jan-14, 8:35 am)
சேர்த்தது : Dheva.S
பார்வை : 223

மேலே