தீயால் பிழைக்க வைத்தான்

தாயால் பிறக்க வைத்தான்;-எங்களை
தீயால் பிழைக்க வைத்தான்!
தலைமேல் எழுதி வைத்தா;-எங்களை
தணலில் உழைக்க வைத்தான்?
(தாயால்)
விதவித மாக சமைக்கும் நெருப்பை
விதவித மாக சமைப்போம்!
வேள்விக்கு மட்டும் உதவிய நெருப்பை
வேட்டு வெடிகளில் அமைப்போம்!
புதுபுது ஒலையில் குறளா வடித்தோம்
ஓலை வெடிகள் மடித்தோம்!
பொடிபொடித் துகளை அணுகுண்டாக்க
உயிரை பணயம் வைத்தோம்! (தாயால்)
ஒருநாள் மக்கள் திருநாள் காண
ஒவ்வொரு நாளும் உழைப்போம்!
ஒருசாண் வயிறை வளர்ப்பதற் காக
உயிரை பணயம் வைத்தோம்! (தாயால்)

கந்தக துகளில் விந்தைகள் செய்து
கனலுக்கும் நிறங்கள் கொடுப்போம்
கனல்பட் டெழும்பும் கருநிறப் பாம்பை
மாத்திரைக் குள்ளே அடைப்போம்!
கந்தகம் நுணுக்கவும் வெடித்திரி திரிக்கவும்
எங்களிடம்தான் கொடுப்பார்!
எந்திரம் வெடித்தால் நட்டம் என்று
எங்களை பணயம் வைத்தார்!
(தாயால் )


சு.அய்யப்பன்

எழுதியவர் : (20-Jan-14, 6:04 pm)
பார்வை : 96

மேலே