விசுவாசம் தொடர்-2
தென்னைமரதிளுருந்து தேங்காய் கந்தன் முகத்தில் விழுந்தது. அம்மா என்ற கூக்குரலோடு மயக்கத்தில் ஆழ்ந்தான். எல்லா ஆடுகளுமே ஓடி வந்து பார்த்து கதறியது. ஒரு கடா ஆடு மட்டும் அருகில் இருந்த தூக்கு வாலியை எடுத்து திறந்து அதில் உள்ள நீரை கந்தனின் முகத்தில் தெளித்தது.சற்று நேரத்தில்
விழித்து பார்த்த கந்தன் கடா ஆட்டை கட்டி தழுவினான். மற்ற ஆடுகளும் நலம் விசாரிப்பது போல நாவால் வருடிய வண்ணம் இருந்தது.
சூரியனை பற்றிக்கொள்ள மாலை பொழுது
மெல்ல அரவணைக்க கந்தன் ஆடுகளோடு
நடையைக்கட்டினான் . இப்படி பாசத்தோடு பல
நாட்களை நகர்த்தியபடி இருந்தான். அன்று இரவு
நல்ல உறக்கத்தில் இருந்தான். எதோ பெரிய
வெடி சத்தத்தை கேட்ட அதிர்ச்சியில் ஆடுகள்
வெறித்து ஓடியது. கடா ஆடு மட்டும் மெல்ல தரையில் காதை வைத்து கேட்டது.நிலைமையை
புரிந்துகொண்ட கடா அவசரமாக கந்தன் வீட்டுக்குள் நுழைந்தது.
அங்கே தூங்கிகொண்டிருந்த கந்தனின் கைகளை
தன் வாயால் கவ்வி இழுத்துக்கொண்டு வெளியே
வந்தது. அடுத்த நிமிடமே வீடு குலுங்கியது
சில நொடிகளில் தரைமட்டமானது, என்ன செய்வதென்று புரியாமல் அதிர்சியில் நின்று
கொண்டிருந்தான் கந்தன். பூகம்பத்திலிருந்து
தன்னை காப்பாற்றிய கடாவுக்கு என்ன கைம்மாறு
செய்வேன், ஆனந்த கண்ணீரில் மிதந்தான்
சுற்றும் மரண ஓலம் முடிந்தது. இரவல் வாங்கிவந்த
கடா இந்த அளவிற்கு விசுவாசம் காட்டுகிறதே
என்று மனம் பூரித்து நின்றான். அந்த மகிழ்ச்சி
நீடிக்கவில்லை. மறுநாளே கடாவின் சொந்தக்காரர்
வீட்டிற்கு வர கந்தன் அதிர்ச்சியானான்
என்ன விலை கொடுத்தாவது கடாவை வாங்கியாகவேண்டும்,.. உறுதியாய் இருந்தான்
பல வாதங்களுக்கு பிறகும் அவன் எண்ணம் பலிக்கவில்லை

