கவி சோலை கமுருகேசன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கவி சோலை கமுருகேசன் |
இடம் | : வெம்மணி |
பிறந்த தேதி | : 02-Sep-1974 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 302 |
புள்ளி | : 56 |
விவசாய குடும்பத்திலிருந்து பிறந்த ஏழ்மையான இந்த மனிதன்
சிருவயதிலுருந்தே கவிதையை நேசித்தவன் . வயல் வெளியில்
வேலை பார்த்துவிட்டு கலைப்பாரும்போதேல்லாம் இயற்கையை
பற்றி எழுத பிடிக்கும்.
அதிசயமே அதிசயிக்கும்
அழகு!
அங்கீகரிக்க அறிவியல் தேடும்
மிளகு!
உன்னருகே நானிருந்தால்
உறைந்துவிடும்
உலகு!
மேனியெல்லாம் பூசியிருக்கிறதோ
மெழுகு!
மெத்தனத்தில் எனைவிட்டால்
மெது மெதுவாய்
விலகு!
காற்றை கயிறாக்கி
கீற்றை முடைந்து
களைப்பாறும்
கூற்றை அடைந்தவனே!
நீ
சேற்றை அளந்துபார்த்து
செவிக்கினிய
சாற்றை சதற்கினிந்து
சரீரம் பெற்றவனே!
சிறந்ததை
செய்ப்பொழுது
பிறந்ததை பேணாக்கிடின்
துறந்ததை
துயில் மறந்து
குயில் பாடும்
இசையோடு
வாழ்க பல்லாண்டு !
ஏதோ உன்னிடம்
இருக்கிறதாம்!
அறியாமல் நான்
அடைபட்டு
ஏதேதோ
செய்துவிட்டேன்!
மயக்கத்தில் என்
இயக்கம் தெரியாமல்
தயக்கம் கொண்டது
தரிகெட்டுப்போன வாழ்க்கை!
உயர்ந்த பின்
உச்சியில்
பார்க்கும்போதுதான்
பிச்சியில் பூத்ததும்
பிஞ்சில் பழுத்ததும்
நெஞ்சில் தெரிகிறது!
ஒருவர்: என்னங்க இந்த ஆடு கத்திகிட்டே இருக்கு
இன்னொருவர்: அருக்குறதுக்கு கத்தி கிட்ட இருக்குறதுனாலே!
இறவாமல் பிறந்தாளோ
என் அன்னை
பெண் குழந்தை வடிவிலே...
****
பிறந்த தளிரின்
பாதம் முகர்ந்தேன்
அந்த பாத மலருக்கு
இணையாக
எந்த முல்லை மலரும் மணக்கலையே....
****
மழலை பாதம்
கொடுத்த ஸ்பரிசம்
உயிரின் வேர் வரை
உன்னதம் பேசும்.....
*****
அவளின் பொக்கை வாய் சிரிப்பு
எனக்கு
"பொக்கே" கொடுத்ததாய் களிப்பு
*****
அக்கா, தங்கையோடு
பிறவாதவனுக்கு
ஆண்டவன் தரும் நஷ்டஈடு
பெண்குழந்தை
*****