மழலை பாதம்

இறவாமல் பிறந்தாளோ
என் அன்னை
பெண் குழந்தை வடிவிலே...
****
பிறந்த தளிரின்
பாதம் முகர்ந்தேன்
அந்த பாத மலருக்கு
இணையாக
எந்த முல்லை மலரும் மணக்கலையே....
****
மழலை பாதம்
கொடுத்த ஸ்பரிசம்
உயிரின் வேர் வரை
உன்னதம் பேசும்.....
*****
அவளின் பொக்கை வாய் சிரிப்பு
எனக்கு
"பொக்கே" கொடுத்ததாய் களிப்பு
*****
அக்கா, தங்கையோடு
பிறவாதவனுக்கு
ஆண்டவன் தரும் நஷ்டஈடு
பெண்குழந்தை
*****

எழுதியவர் : சித்ரா ராஜ் (28-Feb-15, 12:23 pm)
Tanglish : mazhalai paathm
பார்வை : 2434

மேலே