மயக்கம்
ஏதோ உன்னிடம்
இருக்கிறதாம்!
அறியாமல் நான்
அடைபட்டு
ஏதேதோ
செய்துவிட்டேன்!
மயக்கத்தில் என்
இயக்கம் தெரியாமல்
தயக்கம் கொண்டது
தரிகெட்டுப்போன வாழ்க்கை!
உயர்ந்த பின்
உச்சியில்
பார்க்கும்போதுதான்
பிச்சியில் பூத்ததும்
பிஞ்சில் பழுத்ததும்
நெஞ்சில் தெரிகிறது!