உன் நினைவுகளால் நிறைத்து வைத்திருக்கிறேன் என்னை -குயிலி

உன் நினைவுகளால் நிறைத்து வைத்திருக்கிறேன் என்னை -குயிலி
உன் அண்மையற்ற
முன்னிரவுப்
பொழுதொன்றில்
என் படுக்கையெங்கும்
நினைவுகள்
இறைந்துகிடந்தன
சட்டெனநீண்ட
கைகள் நீயில்லா
நிலையறிந்து
விழித்துக்கொண்டது
நீள் இரவு
கடக்க
அதிரத்தழும்பும்
எண்ண அலைகள்
உன் வன்மம்
புதைத்துக்கொண்டிருந்தது
வெளிகளை நிரம்பிக்கிடந்த
உன் நறுமணம்
பரீட்சயமில்லா
என் வலியறிய
வாய்ப்பில்லைதான்
கரிய இரவை
வாரிச்சுருட்டி வந்த
வெண்ணிலா
என்னை நோக்கி
சில்லுசில்லாய்
சிதறியது
ஆம்...
என் உள்ளங்கையெங்கும்
வெறுமை ஒழுகியது
தேங்கிநின்ற
ஒன்றிரண்டு
வார்த்தைகளும்
திராணியற்றுக்
கரைகிறது ....!