kaathal

அவள் என்னை
ஆதரிப்பாளா?
ஆயிரம் கேள்வி!
அதற்காக செய்தேன்
அனுதினமும் வேள்வி!
இப்பொழுதுதான் தெரிந்தது
இது
எழுதப்படாத தோல்வி!
நினைத்தபோது
தெரிந்தது பாசம்!
அணைத்தபோது
தெரிந்தது வேஷம்!
வெறுத்தபோது
விலகியது தோஷம்!
சில்லறை கண்டு
தொட்டது!
ஜில் அறை கொண்டு
கெட்டது!
வில்லுரை கேட்டு
விட்டது!
பையை பார்த்து
சிரித்தது !
பொய்யை பார்த்து
பறித்தது!
கையை பார்த்து
விரித்தது!
இது
காதலின் சூத்திரம்!
கடவுளின் ஆத்திரம்!

எழுதியவர் : கவிஞர் க முருகேசன் (6-Jul-17, 2:05 pm)
பார்வை : 147

மேலே