காதல்
பெண் : அன்பே என் கண்களில் தூசி
எரிச்சல் தாங்க முடியலையே
கொஞ்சம் நெருங்கி வந்து
ஊதி விடுவீரா தூசி போக
ஆண் : கண்ணே அதற்கென்ன இதோ
வந்துவிட்டேன் உன் ஆசை நாயகன்
ஊதிவிட்டு அந்த தூசியைக் கலைந்திடவே ............
பெண் : போதும், போதும் நீ ஊதியது
அந்த ஊதலில் அலைமோதி வருகிறது
மதுவின் வாசனை உன் போதையின் சின்னம்
இந்த ஊதல் இன்று இதை எனக்கு
தெரிந்தோ தெரியாமலோ தெளிவுபடபிருத்தியது
என் கண்களில் இப்போது மாசு இல்லை
உள்ளமும் தெளிவடைந்தது ............
நம் காதல் பயணம் முற்றுப்பெற்றது
குடி குடியை கெடுக்கும் மட்டும் அல்ல
காதலையும் மே.....................
ஆண் : பெண்ணே இது அநியாயம்
பெண் : எது அநியாயம் நீயே சொல்லு
மது அருந்தி வாகனம் ஓட்ட
........அதற்கு தண்டனை உண்டு
ஓட்டுவது நின்று பயணம் நின்றுவிடும்
உன் சுவாசம் காட்டிக் கொடுத்து விட்டது
குடித்துவிட்டு நீ இங்கு வந்துவிட்டாய் என்னைக்
காண; அது அம்பலமானது நீ என் கண்களில்
ஊதியபோது........... நம் காதல் பயணமும்
நின்றது ....................முற்றுப்பெறாது இனி.......
ஆண் : பெண்ணே இறங்கிட மாட்டாயோ ..............