உன் பாதையில்
வட்டக் கண்ணாடி
வரி விழுந்த முகம்
நரைத்த முடி
சமாதான உடை
பற்கள் தெரியாத புன்னகை
பற்ற வைக்கும் பேச்சு
பாதையைக் காட்டும் தடி- உன்
வாழ்வில் வென்ற இலட்சியம்...
முதியவரே,
உன்னைப் பார்க்கும்போது
உன் வயது தெரியவில்லை,
என் தன்னம்பிக்கை தெரிகிறது...
உன் கனவை நினைவாக்க நானும்,
உன் பாதையில்....

