உங்க நோவுகளுக்கு மூல காரணமே இதான்

உங்க நோவுகளுக்கு மூல காரணமே இதான்!

பெரிய பொன்னான் அடிக்கடி வாய்ப்புண், ததலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, அது இது என்று அவஸ்த்தைப் பட்டான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டு. " முதலில் ஒரு பல் டாக்டரைப் பார்க்கலாம்" என்று புறப்பட்டான்.
டாக்டர் - "நெக்ஸ்ட்"
பெபொ-"வணக்கம், டாக்டர்"
டாக்டர் - "என்ன தொந்தரவு, சொல்லுங்க"
பெபொ - "விடாத வாய்ப்புண்ணு டாக்டர். அத்தோட
தலைவலி, வயித்துப் போக்கு வேர"
டாக்டர் - "அப்படியா? கூச்ல படுங்க, பாப்பம்"
டாக்டர் இரண்டு மணி நேரத்திற்கு எல்லாச் சோதனைகளையும் செய்து விட்டு, முடிவாகச் சொன்னார்.
டாக்டர் - "இங்க பாருங்க! உங்களோட எல்லா
நோவுகளுக்கும் மூல காரணம் இந்தப்
பல்லுகதான். ஒரு நாலஞ்சப் புடுங்கணும்.
அப்றம் எல்லாம் சரியாயிடும்!"
பெபொ - "அட அப்டியா டாக்டர்! நான் அப்பப்ப
அடிக்கடி வாய்ப்புண் வர்ரப்பவே
நெனச்சேன், இந்தக் கெரகமாத்தான்
இருக்கும்னு! இந்தாங்க உங்களுக்கு
வேண்டியதப் புடிங்கீருங்க!"
என்றபடி தனது பொய்ப்பல் செட்டைக் கழற்றிக்
கொடுத்தான்!

எழுதியவர் : சந்திர மௌலீஸ்வரன்.ம.கி. (27-Jan-14, 7:26 pm)
பார்வை : 161

சிறந்த நகைச்சுவைகள்

மேலே