தனிமை
தாழிடப்பட்ட கதவுகளின் பின்னே நெக்குருகி
கிடக்கிறது சூன்யம் மிகுந்த கொடுந்தனிமை.....
_
எப்போதாகிலும் வரும் இதழோர புன்னகைகளை நிலைக் கண்ணாடியின் முன்னே ஒத்திகை பார்த்துக் கொள்கிறேன்...
_
ஆனாலும் நிறைந்துதான் கிடக்கிறது வெறுமை தீவாய்
எனது அறை.......