அன்பில்லாம கறைஞ்சது போதும்
ஒரு சின்ன கதையோட தொடங்கலாம் . ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான் , அவன் தன்னால் எல்லாவற்றையும் வாங்கி விட முடியும் என நினைத்து கொண்டு இருந்தான் . ஆனால் ஒரு நாள் காட்டு வழியே சென்று கொண்டு இருக்கும் பொழுது , ஒரு திருடன் அவனிடம் கத்தியைக் காட்டி பயமுறுத்தி பணத்தை வாங்கி கொண்டு சென்று விட்டான் . அந்த திருடனோ வேகமாக ஓடிச் சென்று பசியால் வாடி கொண்டு இருக்கும் தன் அன்னைக்கு பசியாற உணவு வாங்கி கொடுத்தான் .
இந்த கதை மூலம், “என்ன சொல்லப் போர” அப்டினு நீங்க கேட்களாம் . ஆனா நான் இந்த கதை மூலமா எதுவும் சொல்லல , இந்த கதைல வர்ர மூக்கியமான மூன்றை வைத்து தான் சொல்ல போறேன் . அந்த மூக்கியமான மூன்று பணம் , பயம் , அன்பு .
இந்த உலகம் நன்றாக இயங்குவதற்கு மிகவும் அவசியம் ஆன ஒன்று பொருள் பரிமாற்றம் . ஒரு பொருள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்றால் தான் அந்த பொருளுக்கு ஒரு முழுமை கிடைத்து , அந்த இடமும் சிறப்பு பெறும் . ஒரு பொருள் ஒரு இடத்தில் தேங்கி கிடந்தால் அந்த பொருளின் மதிப்பும் குறைந்து விடும் . இவ்வாறு இந்த பொருள் பரிமாற்றம் நடைபெற அவசியமான மூன்று தான் பணம் , பயம் , அன்பு .
பணம் :
இந்த உலகத்தையே உலுக்கிக் கொண்டு இருக்கும் ஒரு பூதம் . பலரை மனிதத்தை மறந்து , மரணத்தை துணிந்து தன் வாழ்க்கையை வெறும் பணத்தை கக்கும் இயந்திரமாக மாற்றிய ஒரு கரு நாகம் . இப்பொழுது இந்த நேரத்தில் எல்லாமே அந்த ஒரு பேப்பர் இருந்தால் கிடைத்து விடும் . நமக்கு அடிமையாக இருக்க வேண்டிய ஒன்றுக்கு நாம் அடிமையாகி கிடப்பது என்பது வேதனைக்குரிய விடயம் . அப்படி என்ன தான் இந்த பணத்திற்கு மரியாதை என்று நாம் அனைவரும் யோசிக்க ஆரம்பித்து விட்டால் இந்த பூதம் நம் பாதத்திற்கு அடியில் கிடக்கும் மண்ணாக மாறி விடும் . நாம் பிறப்பில் இருந்து இறக்கும் வரை பணத்தை வைத்து தான் எல்லா பொருட்களை இடம் மாற்றி கொண்டு இருக்கிறோம் . இன்று கல்வி முதல் இறப்பு வரை அனைத்திலும் பணம் ஆடிக் கொண்டு இருக்கிறது . ஆனால் இந்த பணம் அனைவரிடமும் ஒரே மாதிரி இருப்பது இல்லை . அதனால் இந்த பணம் பொருள் பரிமாற்றம் நடைபெறுவதற்கு ஏற்றதாக இல்லை என கருதலாம் . ஏனென்றால் இந்த உலகம் அனைத்து மக்களும் வாழ்வதற்கு தான் , பணம் வைத்து இருப்பவர்கள் மட்டும் வாழ்வதற்கு அல்ல .
பயம் :
ஒருவனின் பலவீனத்தை குறி வைத்து அடித்து , அதன் மூலம் தனக்கு வேண்டியதை பெறுவது தான் இந்த பயம் என்பதின் பொருள் . ஒருவனை பயமுறுத்தி தனக்கு வேண்டுவதை நிறைவேற்றிக் கொள்வது ஒரு மனதின் ஊனத்தை காட்டுகிறது . வலியவர்கள் எளியவர்க்கு கை தான் கொடுக்க வேண்டுமே தவிர அவர்களின் காலை வாரி விடக் கூடாது . இந்த உலகில் அறிவாளிகள் தங்கள் அறிவை பிறரை பயமுறுத்த பயன்படுத்துகின்றனர் . இந்த அறிவு நரிகள் அலாவுதின் ஆகவும் அவர்கள் கையில் பணம் என்னும் பூதம் கிடைக்கும் பொழுது மக்களின் கதி திண்டாட்டம் தான் . மேலும் இந்த நரிகள் இந்த பணத்தைக் கொண்டு குண்டர்களை வாங்கி கொண்டும் மக்களை மிரட்டுகிறார்கள் . நீங்கள் இந்த இடத்தில் ஒரு கேள்வியை முன் வைக்களாம் . நாம படித்து வாங்குரோமே அத எந்த வகையில் கொண்டு செல்வது என்று ? நாம் சற்று அழ்ந்து சிந்தித்து பார்த்தால் நாம் படிப்பது ஒன்று நம் பெற்றோர்க்கு பயந்து அல்லது நம் ஆசிரியற்கு பயந்து அல்லது நம் சமுதாயத்திற்கு பயந்து . இந்த பயம் இல்லாதவர்கள் தான் வெட்டியாக சுற்றி மேலே சொன்ன குண்டர்கள் ஆகிறார்கள் அல்லது அறிவாளிகளால் பயமுறுத்த படுகிற அப்பாவி மக்கள் ஆகிறார்கள் .
மேலே பார்த்த இரண்டு இடத்திலும் ஒருவனின் துன்பத்தில் இன்னொருவன் இன்பம் அடைகிறான் . ஒருவன் அடைகிறான் இன்னொருவன் விடுகிறான் . ஆனால் இந்த அன்பு ஒன்றில் மட்டும் தான் கொடுத்தவனும் சரி , எடுத்தவனும் சரி ஒரு அளவில்லா இன்பத்தை அடைகின்றான் . அன்பு ஒன்றில் மட்டும் தான் அதை கொடுப்பதற்கு அறிவும் தேவை இல்லை , தோற்றம் தேவை இல்லை , பணம் தேவை இல்லை !!! கொடுக்கனும் அப்படின்னு ஒரு சிறிய மனசு இருந்தா போதும்.யாரும் இங்கே தோற்க விரும்புவதில்லை , தோற்க யாரும் போராடுவதில்லை , ஆனால் இந்த அன்பு என்கிற ஒரு விடயத்தில் அனைவரும் தோற்கவே விரும்புகிறோம் மேலும் தோற்கவே போராடுகிரோம் .ஒரு கால கட்டத்தில் பணம் , பலம் , பயத்திற்காக ஓடிய அனைவரும் ஒரு உண்மையான் அன்பிற்காக மனதுக்குள் ஏங்கி கொண்டு தான் இருப்பான் என்பதே நிதர்சனமான உண்மை . அனைத்து மதங்களும் நமக்கு கற்று கொடுப்பது இந்த அன்பை தான் . உண்மை என்னதுன்னா . “நம்ம வாழ்க்கை ரொம்ப சின்னது , நாம எத தேடுரோம் அப்படின்னு நாம தெரிஞ்சு அத தேடி அதை அடைவதற்குள் வாழ்க்கை முடிஞ்சுருது “ . இவ்ளோ சின்ன வாழ்க்கைல நாம ஏன் ஒருத்தர வெறுக்கனும் , அவர வெறுக்குற அந்த நேரத்துல அத மறந்தாலே அங்கே ஒரு அன்பு மலர் மலரும் . கோப பட தான் நேரம் ஒதுக்கனும் அன்பு செலுத்துவதற்கு அல்ல !!! இவ்ளோ சிறிய வாழ்க்கையில் எவ்வளவோ முறை வெறுத்து இருப்போம் , இன்னும் மீதி காலத்திலையாவது அன்பு செய்து தான் பார்ப்போமே !!!!!!!!!!!!
வாழ்வது ஒருமுறை !
வாழ்த்தட்டும் தலைமுறை !!