100 சதவீதம் இது அரசியல் இல்லை பாகம் 1

வணக்கம் நண்பர்களே.......

'இந்தியா' இதனின் பன்முகம் பற்றி நாம் அனைவரும் அறிவோம் ஏனென்றால் இது நம் தாய் திரு நாடு...... தாய் பற்றி அறியாரும் உண்டோ ? சமத்துவம் காணும் தலை சிறந்த நாடு என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை ....... 122 கோடி ஜனத்தொகை கொண்ட நாடு, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 50% இளைஞர்களே! இவர்களில் ஏனையோர் Corporate company யில் வேலை பார்பவர்கள் அல்ல! இவர்களின் கனவுகள் அவ்வளவு எளிதில் நிஜம் ஆவதில்லை...... இவர்களுக்கு அடுத்தபடியில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பதில்லை . CBSE யில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைப்பதில்லை..(கோபம் வேண்டாம் நானும் அரசு பள்ளியில் படித்த மாணவி தான்) அதே போல் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் பள்ளி சந்தோசம் வேறு எங்கும் கிடைபதில்லை....

பணம் மட்டுமே இந்த வேறுபாட்டை காட்டவில்லை . மனமும் தான் .... அரசு பள்ளியில் அரசு ஊழியும் பார்க்கும் பணியாளர்களின் குழந்தைகள் எவரும் படிக்கவைக்ப்படுவதில்லை ....
புத்தகம் தூக்கும் கனவை தொலைத்து ரோடுகளில் பேப்பர் பொறுக்கும் குழந்தைகளுக்கும், work shop ல் வேலை பார்க்கும் குழந்தைகளுக்கும், ரோடு ஓரங்களில் சாந்து சிலை செய்யும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும்ஆரம்பம் மற்றும் அடிப்படை கல்வி என்பதே எட்டாக் கனிதான்....

அமெரிக்க டாலர் மதிப்பில் நாள் ஒன்றிற்கு ரூபாய் 77.85 கீழ் சம்பாதிப்போர் வறுமைகோட்டிற்கு கீழ் இருப்போர் என்கிறது உலக வங்கி . இதுவே சர்வதேச வறுமை கோட்டிற்கான மதிப்பீடு. ஆனால் நம் தலைவர்கள் 32 ரூபாய் இருந்த போதும் நகரத்தில் வாழ்கை நடத்த என்றும் 26 ரூபாய் போதும் கிராமத்தில் வாழ்ந்திட என்கிறார்கள். என்ன செய்வது? 32.7 சதவித இந்தியர்களுக்கு நாள் ஒன்றிக்கு சுமார் ரூபாய் 77.85 சம்பளம் என்பது கனவு தான்.... ஆசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரர்களை கொண்ட நாடு மற்றும் உலகின் 5 வது பெரும் பணக்காரர்கள் கொண்ட நாடு எது? அட நம்ம இந்தியா தாங்க..... லக்ஷ்மி மிட்டலும், அணில் அம்பானியும் , அசிம் பிரேம்ஜியும் பிறந்த இதே நாட்டில் ஒருவேளை உணவும் இல்லாமல் இறப்போர் எண்ணிக்கை ரொம்ப அதிகம்......

சரியான உணவு கிடைக்காமல் , சரியான அடிப்படை தேவைகள் கிடைக்காமல் சுமார் 2.1 மில்லியன் குழந்தைகள் 5 வயதினை எட்டி பார்க்காமலே இறந்து விடுகின்றன ...

WHO என்கின்ற world Health Organization அறிவித்துள்ளது இந்தியாவின் 55% குழந்தைகளுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை. ஊட்டச்சத்து பற்றாகுறை உள்ள குழந்தைகளாகவே வாழ்கின்றனர். பஞ்சம் என்றவுடனே நினைவிற்கு வரும் ஆப்ரிக்க நாடுகள் கூட தங்களின் வருங்கால குடிமக்களை இந்தியா அளவிற்கு ஊட்டச்சத்து இல்லாமல் வளர்ப்பதில்லை என்பது ஆச்சரியமான உண்மை... 66 வது சுதந்திர ஆண்டில் நாம் வாழ்கிறோம் ... அரசியலுக்கு வருவோரை எல்லாம் வாழ வைத்திருக்கிறோம் .... தனி ஒரு மனிதனிற்கு உணவில்லை எனில் ஜகத்தினை எரிக்க சொன்னான் பாரதி/ வருங்கால இந்தியாவே வறுமையின் பிடியில், ஊழலின் பிடியில், சுயநலத்தின் பிடியில் சிக்கிக் கொண்டு உணவில்லாமல் சாகிறதே! அடிப்படை தேவை இல்லாமல் சாகிறதே! நாம் என்ன செய்ய போகிறோம் ....... (100 % நான் அரசியல் வாதிகளை குற்றம் சொல்லவில்லை வறுமை இல்லா வல்லரசை உருவாக்குவோம் என்று சொல்லி வந்த அனவைரையும் நம்பி ஓட்டளித்து ஏமாந்து போன எங்களின் வலியை சொல்கிறேன்)
வல்லரசு கனவை வறுமையின் கால்கொண்டு கலைத்துவிட வேண்டாம்.......

எழுதியவர் : நித்யா. பா (9-Feb-14, 3:28 pm)
பார்வை : 381

மேலே