காதில் கேளடி காதலியே
அன்னநடையில் சின்ன இடையில்
வண்ண உடையில் எந்தன் மயில். உன்னை
கண்டநாளில் கண்டகண் காட்சியில்
கெண்டைமீனாய் துடிக்கிறேன் காதலில்
உண்டச்சோறு திக்கி விக்குகிறது
தொண்டைக்குழியில் சிக்கி மிரளுது- உன்
அகண்டவிழியும் மயக்கி சொக்குகிறது
கொண்டகாதலும் ஏங்கி தவிக்கிறது
வீறுக்கொண்ட சமூக சிந்தனைகளில்
வீழ்ந்துக்கொண்டிருக்கிறது காதல் சித்தாந்தங்கள்.
எதிர்க்கொண்ட கடன் பத்திரங்களில்
எழுதிக்கொண்டிருக்கிறேன் காதல் கவிதைகள்.
இன்னும் என்னனென்ன செய்வாய்?
இன்று கிழமையென்ன ? செவ்வாய்
என்று சுவைப்பேன் உந்தன் செவ்’வாய்?
அன்றுவரை எந்தன்கனவில் நீயே வருவாய்.
```````````````````````இரா.சந்தோஷ் குமார்.
----------------------------------------------------------------------------
இந்த படைப்பின் பிண்ணனி :
**15 நிமிடத்தில் கவிதை எழுதவேண்டும்
**சந்தமிக்க கவிதையாக இருக்க வேண்டும்
**காதல் கவிதையாக இருக்க வேண்டும்
**4 கண்ணியில் 16 வரிகள் இருக்க வேண்டும்.
இது இந்த தளத்தில் உறுப்பினர் அல்லாத
நண்பர் ஒருவர் எனக்கு விடுத்த சவால்..
----------------------------------------------------------------------------