மென் அமைதி

மென் அமைதி கொண்டாயடி
பெண்ணே
என் அமைதி பறித்தாயடி
நிலவே !

வன் கொடுமை செய்யாதடி
கண்ணே
வானுலகம் நானேற வாய்ப்பளிக்காதடி
உயிரே !

பாதகமற்ற சொல்லொன்றை கூறியிடுடடி
பாவையே
பாரிதனில் நாம் இருவர்
பள்ளி கொண்டு வாழ்ந்திடவே !

என் நாமம் நீயறிவாய்
உன் நாடி நானறிவேன்
நம் ஜோடி ஊரல்ல உலகறியும்
துணையே !

கணியன் பூங்குன்றனாரின்
வார்த்தைகளில் வாழ்வமைப்போம்
உன்னூரும் என்னூரும்
அவன் கூற்றில் நேர் கொள்ளட்டுமே !

ஊனென்ற உலகை
நான் கண்டு சில காலமாயிற்றடி அன்பே
உன் ஊமை நிலையை கைவிட்டு
என் விரதம் தீர்த்துடடி அன்னமே !

எழுதியவர் : ஷஹான் நூர் (11-Feb-14, 8:07 pm)
சேர்த்தது : ஷஹான் நூர்
Tanglish : men amaithi
பார்வை : 80

மேலே