பிப்ரவரி பதினாலு 3

பிப்ரவரி பதினாலு (3)

====================================ருத்ரா

இ எனும்
என் அருமை நண்பர் ஒருவர்

தூரல்
சாரல்
மாரல் என்ன?
என்று கேட்டார்.

அவருக்கு அளித்த‌
பதிலே இது

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍______________________________________________

மாரல் கேட்கின்
"இ"லை வடிவேலோய்

மாரல் மாரல்
மாறனது கணையே

இன்னும் கேட்கின்
கூர் எழுத்து வேலோய்

இது வேலன்டைன் எனும்
ஒரு இந்திரவிழா


அண்ணா சாலை
தோப்புக்குயில்கள்
அலை அலையாக‌
ஆங்கே
அம்பும் இதயமும்
அன்பில் தைத்து
ஆர்க்கும் ஒலியில்
அணி திரள்க்கும்மே!

அன்புடன் ருத்ரா

______________________________________________
பிழை பொறுத்தருளுமின்!
_______________________________________________
_
"பிப்ரவரி பதினாலு"வில்
ஒரு பிழை திருத்தம்.

அந்த உலகப்புகழ் பெற்ற
ஓவியத்தின் மேதையின்
பெயரை
எம்.எஃப் ஹுசேன் என்று
திருத்திப் படியுங்கள்.
பிழை பொறுத்தருளுங்கள்.

அவர் ஓவியங்கள்
ஒலியிலும் தவழ்ந்து
எஃப் எம் ரேடியோ போல்
உலகம் பரவியது என்று
வேண்டுமானாலும்
மீசையில் மண் ஒட்டாமல்
சொல்லிக்கொள்ளலாம்.

ஆனால்
அது பண்பாடு அன்று.


அன்புடன் ருத்ரா

எழுதியவர் : ருத்ரா (11-Feb-14, 8:43 pm)
பார்வை : 88

மேலே