நெய்தல் - தண்ணீர் தேவதை

கடல்...
பூமிப்பந்தின்
மூத்தக் குழந்தை
அசையாமல் அசையும் அழகு

மேக வண்ண தேகம்
நிலவு பொட்டு
ஆழ்கடல் அமைதி
பேரலை கோபம்
கரையோர நுரை
கொலுசு

படகு தூரிகை
பாய்மரம் சாமரம்
கப்பல் தாலாட்டு

மீனவனுக்கு விளைநிலம்
வீணர்களுக்கு பொழுது போக்கு
காதலர்கள் சங்கமம்
கவியின் காதலி

மேகத்தின் திறவுகோல்
முத்துகளின் தாய் வீடு
உப்பின் உறைவிடம்
வாணிபத்தின் வழித்தடம்
தேசத்தின் அளவுகோல்

கடல்....
பூமிப்பந்தின்
மூத்தக் குழந்தை
அசையாமல் அசையும்
அழகு தேவதை

எழுதியவர் : அமிர்தா (12-Feb-14, 2:51 pm)
பார்வை : 314

மேலே