வேண்டும் வேண்டும் - பூவிதழ்
வாரம் இருநாள் ஞாயிறு விடுமுறை வேண்டும் !
வாரத்தில் ஒருநாள் ஞாயிறும் விடுமுறை வேண்டும்!
தாயைப்போல் காதலி வேண்டும்!
தந்தையான பின்பும் தாய்மடி வேண்டும் !
குறையில்லா பிரசவம் நாள்தோறும் வேண்டும் !
குழந்தை பசியென்று வந்தால் தந்தைக்கும்
பால்சுரக்க வேண்டும் !
பசியை செரிக்க மருந்தொன்று வேண்டும் !
பணம் பறிக்க மரமொன்று வேண்டும் !
காசுகொடுக்காமல் கல்விவேண்டும் !
களவு கொடுக்காமல் சேமிப்பு வேண்டும் !
விரும்பிய வேலை வேண்டும் !
விபத்தில்லா சாலை வேண்டும் !
செவி சிரிக்க கவி வேண்டும் !
கவி படிக்க செவ்வாயில் இடம் வேண்டும் !
கண்ணீரில்லா காலைச்செய்தி வேண்டும் !
கடவுள் உண்டென்றால் கண்ணெதிரே வேண்டும் !
துன்பம் விருந்தாளியாய் வந்துபோக வேண்டும் !
துணைவிபோல இன்பம் கூட தங்கிட
உழவன் விளைச்சலுக்குஉரிய விலைவேண்டும் !
என் தாயை சுமந்திட எனக்குள் கருப்பை வேண்டும்!
எட்டாம் அறிவாய் என்தமிழ் இருந்திடல் வேண்டும் !

