துளித் துளியாய்

இன்றைய திருமணங்கள்.

அவசர ஆடம்பரங்களின்
அர்த்தமிழந்த ஆட்சேர்ப்புகள்.
########

புலவன்.

வார்த்தைகளின் பிரம்மா
போலிகளின் எறிகணை.
#######

அதிகாரிகள்.

செவ்வையாக்கப்பட்ட
கோப்புகளில்
கையொப்பமிடும்
ரப்பர் முத்திரைகள்.
######

மதம்

கலவரங்களைத் தூண்டிவிடும்
பிரிவினைவாதி.
######

கவிதை.

பக்குவப்படாதவனுக்கு
பைத்தியக்காரனின் கிறுக்கல்கள்.
#######

இன்றைய காதல்

வாலிபப் பருவத்தில்
முகத்தில் பூசிக்கொள்ளும்
பவுடர்.
#####

மனிதர்கள்.....

மனிதநேயத்தை தொலைத்துவிட்டு
நீதிக்காக குரல் கொடுக்கும்
கட்டியங்காரர்கள்.
######

எழுதியவர் : selvanesan (12-Feb-14, 11:09 pm)
பார்வை : 119

மேலே