பூ உதிர்காலம் - பூவிதழ்

காம்புகளுடன் என்ன
கருத்து வேறுபாடோ ?
பிரிந்து கிடக்கிறாய் !---- ***********************************************

வசந்தம் இறந்து போனதோ ?
வழிஎங்கும் கொட்டிக்கிடக்கிறது
வழியனுப்பியவாரு அஞ்சலி பூக்கள் !---
***************************************************

மண்மீது மலர்கள் மேடை
யார் வருகைக்கோ !----
**************************************

காற்று வாசித்த கவிதைக்கு
குலுங்கி சிரித்த மரங்கள் !---- *************************************


மரம் உதிர்த்த புன்னகை - பூக்கள்
யார் உரைத்த நகைச்சுவையோ ! ---
********************************************

உதிரிப்பூக்களின் ஒப்பாரி
கவிதையெழுதென எனைக்கோரி
ஏதோ எழுதினேன் நாலுவரி -----
+++++++++++++++++++++++++++++++++++

பூ உதிர்காலம் பார்த்து
உதிர்ந்த பூக்களுக்காக
கற்பனையாய் ஒரு கவிதை ....

எழுதியவர் : பூவிதழ் (13-Feb-14, 1:24 pm)
பார்வை : 870

மேலே