சமாதானத் தலைவர்

சமாதானத் தலைவர்

சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டதால்
பீதியோடும்
நடுக்கத்தோடும்
அடுத்து என்ன நடக்குமோ
என்னும் தவிப்புகளோடும்
அமைதி இழந்தும்
இருந்த புறாக்களை கைகளில்
கொடுக்கப்பட்டபோது
சமாதானத்துக்காய்
பறக்கவிடப்பட்ட தலைவர்
புறாக்களை விடுவித்துவிட்டு
சமாதானத்தை பற்றியும்
சுதந்திரம் பற்றியும்
கைதிகளிடம் சுதந்திரமாய்
பேசிவிட்டு
அவசரமாய்
விடைபெற்றார்.
புதிய சிறைச்சாலை
திறக்கும்
அடுத்த கூட்டத்திற்கு!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (15-Feb-14, 2:40 am)
பார்வை : 160

மேலே