ஒரு எறும்பின் அழுகை
ஒரு மாலை பெய்த மழையில்
ஊர்வலம் சென்ற எறும்புகள் .
கண் இல்லாத போதும் கண்ணீர் ...
இறந்திடுவோமோ என்று...
தான் நனைந்த வேளையிலும்
குடையாய் நின்றது....காளான்..
அந்த எறும்பு உயிர் பிழைக்க..
நன்றியுடன் ..திரும்பியது..எறும்பு..
மறுநாள் எறும்பு அழுகுது..
காற்று தட்டியதால் ..சாய்ந்த நிலையில்..
சரிந்த நிலையில்....காளான்..
எறும்பு அழுதது ..
உயிர் தந்த உயிர் இல்லையே என்று ..

