கடைக்கண் பார்வைக்காக
பார்த்ததும் மகிழ்ந்தேன்
உன் விழிகளை கண்டதும் நெகிழ்ந்தேன்
பல நாட்களாய் காணாமல் தவித்த உன்னை
கண்டதும் சொல்லமுடியா சுகம் கண்டேன்
உனை சுமந்த இதயம்
இன்றும் உனை விரும்புகிறது
ஏனோ காரணமின்றி
விலகி செல்கிறாய் என் உயிரே
உன் நிழல் நான் என்பதை மறந்து
உனை காண துடித்தேன் பலநாட்கள்.
கண்டபின் தவிக்கிறேன் எக்கணமும்.
வாடிய என் மனதுக்கு
நீர் ஊற்ற வந்தாயா?
இல்லை வாடிய என் உடலுக்கு
மலர் தொடுக்க வந்தாயா?
மறந்து விடு என்றனுப்பி
என்னை விட்டு பிரியலாகுமோ?
உன் சொந்தமாய் ஓர் உயிர்
இருந்ப்பதை மறக்கலாகுமோ?
உன் மன நிம்மதியை போக்க என்றுமே
என் மனம் நினைத்தது இல்லை என் காதலே.
உன் சந்தோஷம் காணவே இப்பூமியில்
ஜனித்த அர்ப்பபிறவி நான்.
எனக்காய் என்றும் யாசிக்கவில்லை நான்.
என் உயிர் போகும் நேரம் ஒரு முறை உனை காண
என் விழிகள் காத்துக் கொண்டிருக்கும்.
மாற்றம் ஒன்று தான் மாறாதது.
ஏனோ உன் மாற்றம் தான் என்னை காயப்படுத்துகிறது.
காலங்கள் கரைந்தாலும் நம் காதல் என்றும் வாழும்.
உயிருள்ள குழந்தையாய் சுமக்கிறேன் நம் காதலை.
சுமையல்ல சுகமாய் உணர்கிறேன் உயிரே.
மனித சாட்சிகள் அர்த்தமற்ற போலி தனங்கள்.
நம் மனசாட்சியோ என்றுமே மெய்ப்பாடு.
உன் பிரிவு என்னை வாட்டுகிறது.
ஏனோ உன் மனம் எனை ஏற்க மறுக்கிறது.
உனை விட்டு என் மனம் என்றும் விலகி செல்லாது.
உனை மறக்க இந்த உயிருக்கு
சக்தி கிடையாது என் ஜீவனே.
நம் காதல் சந்தோஷ சாரலில் நனைந்த காலம் இன்றும்
நம் உள்ளம் சொர்க்கத்தில் தான் வாழ்கிறது.
ஒரு உயிர் உன்னை விரும்பியது.
அது என்றும் உன்னை விரும்பும்.
ஆயிரம் உறவுகள் உன்னை மறக்க சொல்கிறது என்னிடம்.
ஆனால் நானோ தீயில் விழுந்த
பட்டுப்புழுவாய் துடிப்பதை யார் அறிவார் இப்புவியிலே?
ஆடவருக்கு எல்லாம் மறந்து போகும்.
ஆனால் பெண்ணுக்கு உயிராய் இருந்த
ஒரு உறவை இறக்கும் நேரமும் நினைக்கும்.
என்னை நீ மறந்து விட்டாய்.
என் மீது கோபம் தான் உனக்கு.
ஆனால் ஏன் எனக்கு உன் மனம் புரியவில்லை.
என் மனம் படும் பாட்டை நீ உணர்வாயா?
உனை பார்த்த அரை நாழிகை ஏதோ சொர்க்கத்தை
கண்டது போல் ஏன் என் மனம் பூரித்தது?
எனக்கு புரியவில்லை.
என் கண் முன்னே நீ தான் வருகிறாய்.
என் குறிஞ்செய்திகள் நின்று விடும் ஒரு நாள்.
உனை அழைப்பதை என் விரல்களும் நிறுத்தி விடும் ஒரு நாள்.
தயவு செய்து அந்த நாளுக்காக என்னை மன்னித்து
பொறுத்து கொள்வாயா என் உயிரே......