யுவா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  யுவா
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  25-Jul-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Feb-2011
பார்த்தவர்கள்:  152
புள்ளி:  28

என்னைப் பற்றி...

எண்ணத்தில் தூய்மை கொண்டு வாழ்ந்தால் எல்லாம் நன்மைக்கே.

மனதிலே என்றும் மகிழ்ச்சியோடு இருக்க பழகிக்கொண்டவள்

என் படைப்புகள்
யுவா செய்திகள்
யுவா - agan அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

1.தலைப்பு - கவிதை
"மீண்டும் வானம்பாடி "
2.வரிகள் 16 --வரி ஒவ்வொன்றிலும் நான்கு தமிழ்ச் சொற்கள்
3..மரபு மற்றும் புதுக்கவிதை தனி பரிசுகள்
4. பிழைகளுக்கு இடம் இல்லை
5.பங்கேற்பு: தளத்தின் இன்றைய உறுப்பினராக உள்ளவர்கள் மட்டும்
6.ஒருவர் ஒரு படைப்பே அளிக்கலாம்

7.நடுவர்கள் : தமிழகத்தின் ஆகச்சிறந்த படைப்பாளிகள்

மேலும்

என் சிந்தையில் படவில்லை . நன்றி தோழரே. மனதில் இருத்திக் கொண்டேன் . 18-Jul-2014 11:06 am
இனி இம்மாதிரியான ஐயங்களுக்கு தனி விடுகை பயன்படுத்தவும் தோழரே.. 18-Jul-2014 9:22 am
தெளிவு படுத்தியதற்கு நன்றி தோழரே . நான் சரியாக பார்க்கவில்லை போலும் . மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொள்வேன் . நன்றிகள் . 18-Jul-2014 8:38 am
எண்ணம் பகுதியிலும் கவிதை பகுதியிலும் 15.7.14 இரவு 10.10க்கு பதிவிடப்பட்டுள்ளது..பலரும் வாசித்து கருத்துரைத்துள்ளனரே...! எனினும் இங்கும் காண்க... மீண்டும் வானம்பாடி-கவிதைப் போட்டி தோழமை நெஞ்சங்களே மீண்டும் வானம்பாடி கவிதைப்போட்டிக்கு தாங்கள் அளித்த ஆதரவு வாழ்த்துக்குரியது...நன்றிகள்.. இப்போது முடிவுகள்.... ஆண்கள் முதல் பரிசு : தோழர்..பொள்ளாச்சி அபி 2ம் பரிசு :தோழர். நாதன்மாறா 3ம் பரிசு :தோழர்.சிவநாதன் பெண்கள் முதல் பரிசு :தோழர். புலமி அம்பிகா 2ம் பரிசு : தோழர் சியாமளா ராஜசேகரன் 3ம் பரிசு : தோழர்.விஜயலட்சுமி -கவிபாரதி மரபு முதல் பரிசு :தோழர்.ஆதிநாடா 2ம் பரிசு :தோழர் விவேக்பாரதி 3ம் பரிசு :தோழர் ஜோசப் ஜூலியஸ் திருநங்கை பின்னர் அறிவிக்கப்படும் நடுவர் குழாம் எனது நன்றிக்கும் அன்புக்கும் கைம்மாற்றுக்கும் உரியது. தொடர் தெரிவில் குழாம் இருப்பதால் அவர்களை அடையாளப்படுத்திட இயலா சூழலை தோழர்கள் புரிந்துக் கொள்வர் என நம்பு கிறேன். இனி பரிசு பெற்றுள்ள படைப்புகளை ஆங்கில மொழிபெயர்ப்பும் திறனாய்வுகளும் தளத்தில் பதியலாம்... பெருகும் அன்புடனும் ஆக்க விழைவுகளோடும் அகன் 18-Jul-2014 7:14 am
யுவா - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jun-2014 12:13 pm

இமைப் பொழுதும் நீ சுவாசமாய்
என்னில் ஜனிக்கிறாய்
இம்மண்ணுலகும் நின் காதலும்
என் மூர்ச்சையின் பின் தான் நித்திரை காணும்
துடிக்கின்ற‌ இருதய‌ம்கூட‌
நின்றுவிட‌ ஏன் ப‌ய‌ப்ப‌டுகிற‌து உனைக்க‌ண்டு?
ஏனோ க‌ண்க‌ள் ம‌றைப்ப‌தை
ம‌ன‌ம் அறிந்துகொண்ட‌தோ?
உன் ம‌னக்க‌ண்ணாடியை காட்டிடுவாயா
என் ஆருயிர் காத‌லே!
உன் கால‌டியில் விழுந்து என்னை காணிக்கையாக்குகிறேன்!
விடை காணா புதிராய் நம் காதலும் சாகட்டும்!
என்னோடு என் கல்லறையில்

மேலும்

அழகான பதிப்பு !! ஜனிக்கிறாய் எனுமிடத்தில் வாழ்கின்றாய் , உயிர் பூக்கின்றாய் என இருந்தால் ?? காதலினில் சோகம் ஒரு பகுதியே அன்றி சோகமே முழுமை இல்லையே ?? என் பதிப்பின் சில வரிகளை பகிர்ந்திட பிரியப்படுகின்றேன் ..... வாழ்வதை பற்றி நான் வாழும் வரை பேசு , ஆசை தீர ஆசையோடு கேட்கின்றேன் மடிவதைபற்றி முடிந்தவரை என் கதை முடிந்த பிறகு நான் மடிந்த பிறகு பேசு எனதருகில் நீயா? பஞ்சு மெத்தைக்கு பக்கத்தில் தீயா? அப்படி ஒரு நிகழ்வு நொடி பொழுதேனும் நிகழ்ந்தால் மறு கணமே மரணத்தை மண்டிபோட்டு ஏற்றுகொள்வேன் எமனை வண்டி கட்டி வர சொல்வேன் உன்னோடு வாழ்ந்துமடிந்த நொடி கணம் ஜென்ம சாபல்யம் என்றே .... 20-Jun-2014 12:51 pm
யுவா - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2014 6:21 pm

பார்த்ததும் மகிழ்ந்தேன்
உன் விழிகளை கண்டதும் நெகிழ்ந்தேன்
பல நாட்களாய் காணாமல் தவித்த உன்னை
கண்டதும் சொல்லமுடியா சுகம் கண்டேன்
உனை சுமந்த இதயம்
இன்றும் உனை விரும்புகிறது
ஏனோ காரணமின்றி
விலகி செல்கிறாய் என் உயிரே
உன் நிழல் நான் என்பதை மறந்து
உனை காண துடித்தேன் பலநாட்கள்.
கண்டபின் தவிக்கிறேன் எக்கணமும்.
வாடிய என் மனதுக்கு
நீர் ஊற்ற வந்தாயா?
இல்லை வாடிய என் உடலுக்கு
மலர் தொடுக்க வந்தாயா?
மறந்து விடு என்றனுப்பி
என்னை விட்டு பிரியலாகுமோ?
உன் சொந்தமாய் ஓர் உயிர்
இருந்ப்பதை மறக்கலாகுமோ?
உன் மன நிம்மதியை போக்க என்றுமே
என் மனம் நினைத்தது இல்லை என் காதலே.
உன் சந்தோஷம் காணவே இ

மேலும்

அருமை தோழமையே... உருக்கமான காதல் வரிகள்...! 19-Feb-2014 9:12 pm
கருத்துகள்

மேலே