காதலில் சாதல்
இமைப் பொழுதும் நீ சுவாசமாய்
என்னில் ஜனிக்கிறாய்
இம்மண்ணுலகும் நின் காதலும்
என் மூர்ச்சையின் பின் தான் நித்திரை காணும்
துடிக்கின்ற இருதயம்கூட
நின்றுவிட ஏன் பயப்படுகிறது உனைக்கண்டு?
ஏனோ கண்கள் மறைப்பதை
மனம் அறிந்துகொண்டதோ?
உன் மனக்கண்ணாடியை காட்டிடுவாயா
என் ஆருயிர் காதலே!
உன் காலடியில் விழுந்து என்னை காணிக்கையாக்குகிறேன்!
விடை காணா புதிராய் நம் காதலும் சாகட்டும்!
என்னோடு என் கல்லறையில்