சேவல்கள் பற்றி உமக்கென்ன தெரியும்

இக்கேள்வியை நம்மில் சிலரிடம் கேட்டால் "காலையில் கூவும்", "ஆண் கோழி சிவப்பு நிறத்தில் கொண்டையுடன் கிராமத்தில் பார்த்திருக்கறேன்" இது தான் பதிலாய் கிடைக்கும். முருக பக்தியில் முத்திப்போனவர்கள் கொடியில் கூவியதை கூறுவார்.

"இதுதான் உலகின் மிகப்பழமையான விளையாட்டின் விதை என எத்தனைபேர் அறிவர்"? தமிழர்களின் பண்டைய வீர விளையாட்டு "சாவல் கட்டு" பலரின் குல கௌரவங்களையும், பல கொடூர உண்மைகளையும் கொண்டதென "ஆடுகளம்" படத்தின் அரைபகுதியில் காட்டினர். இது மட்டும்தானா ஊரின் பெருசுகளும், புல்லட்டு பாண்டிகளும், விடலை பெண்களும் சகட்டுமேனிக்கு சாவல் பிரியரயிருப்பர். ஆம் நானும் அப்படி ஒரு சேவல் பிரியன் தான்!!!


என் பெயர் பிரசன்னா நான் சுற்றுசூழல் ஆராய்ச்சியாளன் மற்றும் ஆர்வலன். எனக்கு சிறு வயதில் இருந்தே விலங்குகள் மீது பெரியளவு ஆர்வம், குறிப்பாக சேவல்கள். என் தெருக்களில் சேவல் சண்டை விடுவதும் காவலரை கண்டு பயந்து ஓடுவதையும் பார்த்த நியாபகம். இதை கண்ட நானும் வண்ண கோழிக்குஞ்சுகளை வாங்கி என் வயது சிறுவர்களுடன் காட்டி இது தான் சண்டை கோழி என்று மார்தட்டியிருக்கிறேன் .

பள்ளி செல்லும் வழியில் சேவல்கள் குப்பைகளை கிளறும் அழகை ரசிப்பது, விடுமுறை நாட்களில் சந்தைக்கு சென்று சேவல்களின் விலையை விசாரிப்பது. இவ்வாறுதான் எனது பள்ளி நாட்களின் விடுமுறை பொழுதுகளை கழிப்பேன். சற்று மேல்வகுப்புகளுக்கு சென்ற பின் விடுமுறை நாட்களை வேலை செய்து அந்த பணத்தில் சேவல்கள் வாங்கி வளர்த்தேன், ஆனால் என் அதிஷ்டம் அவை நோய் வாய்பட்டு இறந்துவிடும் அல்லது நோயுற்ற சேவல்களை வாங்கி ஏமாந்து
நாட்டு சேவல்களையே வளர்த்துவந்த எனக்கு சாதி சேவல்கள் வளர்க்க வேண்டும் என்பதில் முழு கவனமும் இருந்தது. ஆனால் அன்றைய சூழ்நிலையில் சாதி சேவல்களின் விலை 5000 முதல் 6000 இருக்கும். பின்பு கடைசியாக ஒருவரை சந்தித்து 1600 குடுத்து இரண்டு குஞ்சுகள் வாங்கினேன். அதை சண்டைக்கு பயிற்சி என்ற பெயரில் பாடாய் படித்தினேன். இறுதியாக அது சேவலாய் வளர்ந்து நின்றது, அதை விற்க முயன்றேன் யாரும் வாங்க வரவில்லை.

ஒரு நாள் என் வீடு தேடி ஒருவர் வந்து யாருப்பா இங்க சேவல் வளர்க்குறது, விலைக்கு குடுப்பியானு கேட்டாரு. எனக்கோ ஒரே மகிழ்ச்சி நான் வளர்த்த சேவல் விலைக்கு போகபோகிறது என்று, அவர் சேவலை தூக்கி பார்த்து இரண்டும் 800 ரூபாய்க்கு குடு என்றார். நான் அதிர்ந்தேன் இதற்கு விலை 2000 என்றேன், சரிதான் போ நீயே வச்சுக்கோ என்றார். அப்போது தான் தெரியும் நான் வளர்த்தது நாட்டுகோழி இனத்தில் சற்று பெரியவை என்று. அந்த ஏமாற்றம் என்னை பெரிதும் பாதித்தது.மேலும் இரு முறை இதேபோல் இருமுறை ஏமாற்றத்தயே சந்தித்தேன்.
ஆனால் இந்த ஏமாற்றத்தில் ஒரு அறிமுகம் எனக்கு கிடைத்தது, அந்த அறிமுகம் தான் என்னை சேவல் வளர்ப்பில் முழுமையாக ஈடுபட வைத்தது.

ஆம் அந்த அறிமுகம் தான் சேவல் சரவணன். சிறுவயதில் இருந்தே இவரை நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன், தினமும் மாடியில் சென்று இவர் சேவல்களுக்கு இரை கொடுப்பதை பார்திருகிக்கிறேன், பெரிய பெரிய சேவல்களை தூக்கிக்கொண்டு மீசைவைத்த பெருசுகளுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன்.எனக்கு சேவல் வளரிப்பில் ஆர்வம் வந்ததற்கு இவரும் ஒரு முக்கிய காரணம்.

இவர் சேவல் வளர்பில் 35 ஆண்டுகளாக ஈடுபடுகிறார். ஒரே மாதிரியான இனவழி சேவல்களை வளர்த்து இனம் மாற உற்பத்தில் இவர் தேர்ச்சி பெற்றவர். இவருடைய அறிமுகம் கிடைத்து 8 ஆண்டுகளுக்கு பின் நானும் சேவல் வளர்பில் கைதேர்ந்து விட்டேன். எங்களுகென்று ஒரு வளர்ப்பு முறையையும்,உணவுமுறையும் மற்றும் மருத்துவத்தையும் நாங்களே செய்துகொள்வோம். நான் இப்போது அவருடன் இணைந்து இதை தொழிலாகவே செய்கிறோம், நல்ல லாபமும் கிடைகிறது. சேவல்களை வளர்ப்பதிலும் அதனை பாதுகாப்பதிலும் அதிக அக்கறையும் ஆர்வமும் உண்டு. அதற்கு ஏற்ற பலனும் அதிக லாபமும் கிடைகிறது.

எங்களிடம் குஞ்சுககளை வாங்கி வளர்பவர்களுக்கு எங்கள் வளர்ப்பு முறைகளும் உணவுமுறைகளும் கற்றுக்கொடுப்போம். அழகு சேவல்களும், சண்டை சேவல்களும் அதன் தன்மை மாறா வளர்ப்பை பின்பற்றுகிறோம். வால்சேவல்கள் வளர்ப்பதில் மிகுந்த கவனத்தையும் பின்பற்றுவோம், ஆம் அவற்றின் வால்களின் அளவு 1 மீட்டர் முதல் 3.50 மீட்டர் வரை வளரும்.

எழுதியவர் : பிரசன்னா (20-Feb-14, 7:48 pm)
சேர்த்தது : பிரசன்னா
Tanglish : seval veeran
பார்வை : 6684

சிறந்த கட்டுரைகள்

மேலே