சுஜாதாவின் சிறு சிறு கதைகள் நூலிருந்து கொஞ்சம் மட்டும்

சுஜாதாவின் சிறு சிறு கதைகள் நூலிருந்து கொஞ்சம் மட்டும்
விசா பப்ளிகேசன்ஸ், சுகான்ஸ் அபார்ட்மெண்ட், பழைய எண்;28, புதிய எண். 13, சிவ பிரகாசம் சாலை, தி.நகர், சென்னை, தொலை பேசி. 24342899,24327696

நாலாம் பதிப்பு 2012
இந்த நூலை வாசித்தேன். சுஜாதா சொல்கிறார். சின்னஞ்சிறு கதைகள், கவிதைகள், அறிவியல் விசயங்கள், புதிர்கள், படங்கள் இவற்றுக்கு இலக்கணம் ஏதாவது உண்டா?
பொதுவாக 64 வார்த்தைகள் இருக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
இரண்டு வார்த்தைகளிலும் ஒரு சிறு கதை எழுதலாம்.
தலைப்பு : கரடி வேஷம் போட்டவனின் கடைசி வார்த்தைகள்
கதை: ஐயோ சுட்டுடாதே..!
ஹைபுன், ஹைகா என்ற இரண்டு வடிவங்களை குறிப்பிடுகிறார்.
ஹைபுன்; சிறு வருணனை, அல்லது நடை சித்திரம். அதை தொடர்ந்து மூன்று வரிகளுக்குள் பதினேழு அசைகளுக்குள் ஒரு காட்சியை வியக்க வைக்கும் கவிதை
அலுவலகத்தை காலி செய்து விட்டு எல்லா பொருட்களையும், மாட்டி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரானிக் பொருட்களையும் பெயர்த்து எடுத்து சென்று விட்டார்கள் இதை ஒரு வருணனையாக, அதை விவரித்து முடித்தபின் ஹைகூ கவிதையில் கதையை முடிக்கிறார்.
குளிர்காலம் முடிந்தபின்
எத்தனை விரைவாக
பனி உருகுகிறது

பத்திரிக்கை தயாரிப்பின் கடைசி கட்ட ஏற்பாடுகளில் இருக்கிறேன், ப்ரூப் சரி பார்க்க, பக்க அலைன்மெண்ட், லேஅவுட் கடைசியாக வந்து சேரும் தக்வல்களை சரிபார்த்தல்….இப்படியாக இரவு நீண்ட நேர வேளை வேலை, அருகிலுள்ள தேநீர் கடைக்கு நடந்து சென்று ஒரு தேநீர் குடிக்கலாம்..இரவு, பனி.குளிர்..நட்சத்திரங்கள் மின்னுகிறது, நாளை காலையில் பத்திரிக்கையை முழுமையாக பார்த்து விடலாம் என்னும் நம்பிக்கையை கொடுக்கிறது
ஒவ்வொரு நாளும்
நடுநிசியிலேயே
விடிந்து விடுகிறது

இரா.மோகன்ராஜ், திருவரூர்
ஹைகா என்பது ஒரு அருமையான படத்திற்காக எழுதப்படும் ஹைகூ கவிதை
குரல் இல்லையேல்
வெள்ளை கொக்குகள்
காலை வெண்பனியில்
மறைந்து விடும்


இன்னும் நிறைய ஹைபுன் ஹைகா, உதாரணங்களை தந்திருக்கிறார்.

உடனடி கதைகள் : Sudden fiction
மேலை நாடுகளில் பிரபலமான கதை வடிவம்
இதை வடிவமைப்பதை பற்றி சொல்கிறார், எளிமையானவைதாம், கதாபாத்திரங்களும், சம்பவங்களும் கதை எழுதுபவனுக்கு நன்றாக தெரியும், ஆனால் அனைத்தையும் வாசகர்களுக்கு காட்டமாட்டான், ஒரு பகுதியை மட்டும்தான் காட்டுவான்.அதிலிருந்து மற்ற பகுதிகளை வாசகன் உணர வேண்டும்.
இரண்டு வார்த்தை கதைகளை அன்றைய நாளில் குமுதம் இதழ் வாசகர்களை எழுதி அனுப்ப சொல்ல, வந்து குவிந்த கதைகளில் பரிசு பெற்ற இரண்டு

தலைப்பு: விடுமுறைக்கு வந்த கார்கில் வீரனும் கிராமத்து நண்பர்களும்
கதை: ரம் கொண்டாந்திருக்கியா? சேது ஸ்ரீனிவாஸ் மதுரை-2

தலைப்பு: சுவரில் ஆனியடிப்பவன் கேட்ட கடைசி வார்த்தைகள்
கதை: கன்சீல்ட் வயரிங்க்ப்பா தி.ராஜூ, திருநெல்வேலி

வந்ததில் சிறப்பானது

தலைப்பு: மகன் தந்தைக்காற்றும்
கதை: ‘இ மெயில்’ வி. கோபி பெங்களூர்
இன்னும் நிறைய இருக்கிறது.

போஸ்ட் கார்டு கதைகள்:
தலைப்பு: துரதிர்ஷ்டம்
உடம்பெல்லாம் வலியுடன் கண் விழித்தேன், படுக்கையருகில் ஒரு நர்ஸ் நின்று கொண்டிருந்தாள்
மிஸ்டர் புயூஜிமா நீங்கள் ரொம்ப அதிர்ஷ்டகாரர், இரண்டு நாள் முன்புதான் ஷிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்தது, நீங்கள் இப்போது இந்த மருத்துவ நிலையத்தில் பத்திரமாக இருக்கிறீர்கள்.
நான் ஹீனஸ்வரத்தில் கேட்டேன்…நான் எங்கிருக்கிறேன்?
“நாகசாகி” என்றாள்.
இன்னும் இது போல் நிறைய சொல்லியிருக்கிறார்.
சிறு கதைகள் ஏறக்குறைய “ஹைகூ” அளவிற்கு வந்து விட்டன, இருந்தும் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.
ஒரு காட்சியை போட்டோ பிடிப்பது போல –ஹைகூ
ஒரு குறும்படம் போல-சிறு கதை

சிறு சிறுகதைகள் என்பது நீதிக்கதை அல்ல, உபதேச கதையும் அல்ல, மிக கவனமாக கட்டமைக்கப்பட்ட கதை.

நிறைய சுவாரசியமான விசயங்கள் கொடுத்திருந்தாலும் ஒரு சிலதை மட்டும், அதுவும் சுலபமாக எடுத்து எழுதுவதை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். வாசிக்க சிறந்த நூல் 96 பக்கங்கள் தான்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (19-Nov-24, 3:56 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 72

மேலே