விதியின் விளையாட்டு2
ஊரில் நிறைய பசங்க ரிஷானிக்கு காதல் கடிதம் கொடுத்து சில சமயங்களில் இவளால் கேவலப்படுத்த பட்டிருக்கிறார்கள்.
அதில் சிலர் இவள் பரீட்சையில் தோல்வி அடைய வேண்டும் என்று எண்ணி இவளின் பரீட்சை முடிவுக்காக அவர்களும் தீவிர பிரார்த்தனையில் மூழ்கியிருந்தனர்!!!!!!!!
சிலரோ; தேவதையின் தரிசனத்திற்காகவும், இவளின் பதில் கடிதத்திற்காகவும் ஏங்கிக்கொண்டிருன்தனர்..........
தேர்வு முடிவு நெருங்க நெருங்க மிகவும் கவலையுடன் காணப்பட்டாள் ரிஷானி!
பெற்றோருக்கும், அக்காவுக்கும் என்ன ஆறுதல் கூறவேண்டும் என்று தெரியவில்லை காரணம் என்ன சொன்னாலும் அவள் கேட்கமாட்டாள்....
நாட்கள் சென்று கொண்டிருந்தது தேர்வு முடிவும் வந்து விட்டது அவள் எதிர் பார்த்த மார்க் கிடைக்கவில்லை என்றாலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாள் ரிஷானி!!!!
பள்ளியில் இரண்டாவது மாணவியாக வந்திருந்தாள், அது அவள் பெற்றோர் உட்பட அவளை சூழ்ந்திருந்த அனைவருக்குமே மகிழ்ச்சிதான்.........
பெற்றோர் இவள் விரும்பும் படிப்பைக்கேட்டு படிக்க வைக்க ஆசைப்பட்டனர்!!!!!
அவளிடம் வந்து கேட்டனர்;
பொறியியல் படிப்பிற்கு செல்கிறாயா? இல்லை மருத்துவப்படிப்பா? உனக்கு பிடித்ததை சொல் என்று அவளிடம் கேட்டனர்?????
அவளின் பதில் பெற்றோரை அதிர வைத்தது!!
என்னடி சொல்றா?
என்று தாய் ஆவேசப்பட, தந்தை தடுத்தார்....
விடும்மா! அவ விருப்பப்படி படிக்கட்டும் நல்ல கல்லூரியா பார்த்து சேர்த்துடலாம் என்று மகளை செல்லமுடன் அணைத்து விட்டு அவளையும் அழைத்து கொண்டு அங்குள்ள பிரபல கல்லூரிக்கு கிளம்பினார்..........
அவள் ஆசைபட்டபடி "வேதியியல்" பிரிவு எந்த சிரமமும் இன்றி வெகு எளிதில் கிடைத்தது மனதிற்குள் பெரும் சந்தோஷத்துடன் தந்தைக்கு ஒரு முத்தமிட்டாள்!!!!
தந்தையும் தன் மகளின் விருப்பப்படி நடந்தால் அதுவே போதும் என்று பெருமிதம் கொண்டார்.
தன் மகளுக்கு வேண்டியது எல்லாம் வாங்கி கொடுத்து கல்லூரிக்கு அனுப்ப வேண்டிய ஏற்பாடுகளை செய்தார் தந்தை.........
அன்று முதல் நாள் கல்லூரிக்கு சென்றாள் ரிஷானி!!!
முதல் நாள் என்பதாலோ? இல்லை புது இடம் என்பதாலோ? மனதில் படபடப்புடன் புது உலகிற்கு சென்றது போல் ஒரு எண்ணத்தில் கல்லூரியில் காலடி வைத்தாள் ரிஷானி!
இப்படியும் ஒரு புது உலகமா!!!
என்று மனதிற்குள் வியக்கிறாள்!
ஒரு அறையின் வெளியிலிருந்த காவலாளியிடம் சென்று "வேதியியல்
பிரிவு முதலாமாண்டு வகுப்பு எங்கிருக்கிறது" என்று கேட்டாள்!
அவர் கைகாட்டி வளி சொல்லி கொடுத்தார் அப்பொழுது அழைப்புமணி ஒலிக்கவே அங்கிருந்து அவரும் போய் விட்டார்............
இவளைப்போல் நிறைய மாணவ மாணவிகள் தேடி அலைந்துகொண்டிருந்தனர்.
3-வது மாடி 104-வது எண்ணில் வகுப்பு என்பதை அவள் கண்டுபிடிக்க வெகுநேரமாகியது..........
இவள் தேட தேட அனைத்து வகுப்பு மாணவ, மாணவிகளும் இவளையே பரிதாபமாய் பார்த்துக்கொண்டிருக்க!
இறுதியில் ஒருவழியாக தன் வகுப்பை கண்டுபிடித்தாள்.
வாசலில் வந்தவள் வகுப்பினுள்ளே பேராசிரியை ஒருவர் பேசிக்கொண்டிருப்பதை பார்த்ததும்" எக்ஸ் க்யூஸ் மீ மேம் may i come in " என்று கேட்டாள்........
திடீர் குரலால் அனைவரும் கவனத்தை திசை திருப்பி அவளைப்பார்த்தனர்.
"வானத்து நிலவே தேவதையாய்
பூமியில் இறங்கி
நட்சத்திர புன்னகையை
வீசுவது போல் "
வெள்ளை நிற சுடிதாரில் மின்னியவளை பேராசிரியை உட்பட சக மாணவ மாணவிகளும் மிரட்சியுடன் பார்த்தனர்,,,,,,,,,,,,,,,,,,
தொடரும்...........