கெணத்து மேட்ல கெனா கண்டேன்

கெணத்து மேட்ல கெனா கண்டேன்
என் செல்லம்மாவ நெனச்சு !
அத கெடுத்துபுடிச்சு ,
வீணா போன மேகம்
தண்ணிய தெளிச்சு !

சிரிச்சாப்ல மொறச்சாப்ல
என் கண்ணுமுன்ன வந்துபோறியே செல்லம்மா !
சொல்ல சொல்ல தித்திக்குதே
உன் பேரு என்ன வெல்லம்மா ?

கிறுக்கு புடிச்சு அலையிறேன்டி
உன் கத்தி கண்ணால !
சறுக்கு மரம் ஆடுறேயே
என் புத்திக்குள்ளார !

புயலுக்குள்ள புழங்குற ஆள
பூ பறிக்க வெச்சுபுட்ட !
தொடைக்கு மேல தூக்கி கட்டுன
என் வேட்டிய...
உன் தாவணியோட தச்சுபுட்ட !

உன் கள்ளு பேச்சு கேட்டுபுட்டு
கெறங்கி போனேன் புள்ள !
இத்தன நாலு ஆகி போச்சு
போத எறங்கவில்ல!

வீராப்பா நடந்த என்ன
வெடல பைய்யனாக்கிபுட்ட ..
மீசைய முறுக்கி திரிஞ்சவன ...
நண்டு பொண்டுக நக்கலடிக்க வெச்சிபுட்ட !

கஞ்சி தண்ணி குடிக்க கூட
மறந்து போச்சு புள்ள !
கயத்து கட்டில்ல படுத்து கெடந்தும்
ஒறக்கம் போச்சு புள்ள !

என் உசிரே..
உன்ன நெனச்சி நெனச்சி
உருகி போனேனே !
ஏ மயிலே ...
எனக்காக தவிச்சு தவிச்சு மருகி போகாத !

மாமன் நானும் வாறேன்டி !
மல்லிக பூ தாறேன்டி!
கெட்டி மேள சத்தம் ஊரெல்ல வர கேக்க ,
எட்டு பட்டி சனமும்
மூக்கு மேல வெரல வெக்க ,
மாமன் நானும் வாறேன்டி !
மஞ்ச கயித்த தாறேன்டி !

ஊரு கண்ணு மொத்தம் பட்டு ...
என் ஆத்தா நமக்கு சுத்தி போட்டு ...
என் குடிசையில நீயும் வந்து
கோவில் ஆகி போச்சு !
நம்ம வாழ்க்க சொர்கமாகி போச்சு!

உச்சி வெயில் வேள !
நான் கழனிய உழுது போட!
சோதுக்கூட சொமந்து கிட்டே
என் செல்லம்மா பாட்டு பாட !

தண்ணி மூஞ்சில தெளிக்க ...
நான் கண்ணு முழிக்க ...

கெணத்து மேட்ல கெனா கண்டேன்
என் செல்லம்மாவ நெனச்சு !
அத கெடுத்துபுடிச்சு ,
வீணா போன மேகம்
தண்ணிய தெளிச்சு !

எழுதியவர் : நிலவின் நண்பன் (சிவகிரிதர (25-Feb-14, 3:03 pm)
பார்வை : 133

மேலே