காதல் தோல்வி - விவாகரத்தை ஏன் தெரியப்படுத்தவில்லை
![](https://eluthu.com/images/loading.gif)
‘அன்பால்
உலகையே வெல்லலாம்’ என்கிறார்கள்
ஆனால்,
உன் ஒருத்தியை
என்னால்
வெல்ல முடியாமல்
போய்விட்டதே!
எப்பொழுதாவது
உன்னைப் பார்க்கும்போது
உன்னுடனேயே
வந்துவிடத் தோன்றுகிறது
தாலிக்கயிறு
முன்னால் வந்து
திருமணமானதை நியாபகப்படுத்திவிடுகிறது
பல காதல் கடிதங்கள்
ஒரு காதல் தோல்வி கடிதம்
திருமண அழைப்பிதழ் கூட
வந்து சேர்ந்தது
விவாகரத்தை
ஏன் தெரியப்படுத்தவில்லை?