என் விழிகளில் நின்றவளே 555

உயிரே...

பூக்களை
சூடும் பெண்ணே...

பூவின் வாசத்தை
வெறுக்காதடி...

காதலை
நேசிக்கும் பெண்ணே...

என் காதலையும்
வெறுகாதடி...

கனவு ஒரு
பட்டாம் பூச்சி...

வண்ணங்கள்
பல மாறும்...

காதல் ஒரு
கண்ணாம் பூச்சி...

கண்ணை கட்டி
விளையாடும்...

என் சுவாசமே
நின்று போனாலும்...

என் காதலில்
சுவாசம் நிற்காதடி...

என் விழிகளில்
நின்றவளே...

என் நினைவெல்லாம்
உன்னை சுற்றி தானடி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (25-Feb-14, 8:32 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 209

மேலே