மூன்று முடிச்சு 0தாரகை0

விரட்டினார்கள்
அக்னிபகவானை
குடிசை மக்கள்

புகையின்
சாயம் வெளுத்தது
மேக மழையில்

பூசாரியின் வருகைக்கு
கோவிலில் காத்திருந்தேன்
கூடவே கடவுளும்

பைத்தியத்திற்கு அமாவாசை
அரசியல்வாதிகளுக்கு
தேர்தல்காலம்

பழுத்தால்
கசக்கும்
முதுமை

தாளில் பேனா போட்ட
மூன்று முடிச்சு
குழந்தை நடத்திய திருமணம்

எழுதியவர் : தாரகை (27-Feb-14, 10:30 am)
பார்வை : 173

மேலே