சிவராத்திரி இன்று
சீறிப் பாய்ந்த கங்கை அவளின்
சீற்றம் தணிக்கத் துணிந்து நின்று
சிரசில் தாங்கி நிற்கும் வேளை
சினத்தால் உமையவள் முனுமுனு கேட்டு
இதய பீடம் உனக்கே என்று
உடலில் பாதியைக் உமையாள்க் கீந்து
உயிர்கள் காக்க விடமும் குடித்த
நீல கண்டனைப் போற்றிப் பாடு
சிவராத்திரி நடுநிசி யின்று

