படித்த நகைசுவை கதைகள் சூப்பர் ஜோக்ஸ்

சூப்பர் சூப்பர் ஜோக்ஸ்
--------------------------------
நாயர் ஒருவர் மளிகைக்கடை வைத்திருந்தார். அவரது கடைக்கு சாமான்கள் வாங்க கோழி ஒன்று வந்தது.

கோழி முட்டை என்ன விலை? என்றது கோழி.

ஐந்து ரூபாய்

ஒரு முட்டை கொடுங்க! என்று ஐந்து ரூபாயை நீட்டியது கோழி.

கடைக்காரருக்கு ஒரு சந்தேகம். கோழி தானே முட்டைபோட முடியுமே இது எதற்காக நம் கடையில் முட்டை வாங்குகிறது? ஒரு முட்டையை எடுத்து கோழியிடம் கொடுத்துவிட்டுக் கேட்டார். “நீயே முட்டைபோட முடியுமே பின் எதற்காகக் கடையில் வாங்குகிறாய்?”

கோழி எதுவுமே பேசவில்லை.

கடைக்காரர் திரும்பவும் விடாமல் வற்புறுத்திக் கேட்டார்.

“அது எனக்கும் என் கணவருக்கும் உண்டான ரகசியம், சொல்லக்கூடாது” என்றது கோழி.

கடைக்காரரால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை, திரும்பவும் கேட்டார், “அப்படியென்ன ரகசியம்?’

“என் புருசன் சேவல்தான் சொன்னாரு அஞ்சு ரூபா முட்டைக்காக எதுக்கு உன் அழகிய உடம்பை கெடுத்துக்கிறேனு? அதான் முட்டையை கடைல வாங்கிட்டு போறேன்!”

முகநூல்

எழுதியவர் : முகநூல் (6-Mar-14, 9:01 am)
பார்வை : 364

மேலே