மீனவன்

ஒரு வேலை உணவுக்காக
ஓராயிரம் தடவைகள்
செத்துச் செத்து பிழைக்கிறான்
படகிலேரிய ஒவ்வொரு மீனவனும்

ஆழமான கடலுக்குள்ள பயணம்
போகின்றோம் நாங்க
வாழவும், வறுமையைப் போக்க
வழீயின்றி வலையை வீசுகிறோம்

புயலடிக்கும் நேரங்களிலும் உள்ளே
பொழைப்புக்காய் போகிறோம்
ஒரு சான் வயிற்றுக்காய்
அடகு வைக்கிறோம் வாழ்க்கையை

நீண்ட நீலக்கடல் சென்றவனும்
கரை திரும்பாமல் போனால்
காத்துக்கிடக்கிறது வீட்டிலே
கருப்பு கண்ணீர் அஞ்சலி...

அலைகளோடு சேர்ந்து
ஆட்டம் போடுவது
செலுத்தும் படகு மட்டுமல்ல
இவனது வாழ்க்கையும் தான்

உணவுக்காய் மீன் தேடப்
போகின்ற இவனும்
ஒரு நாள் இறையாகிப் போகிறான்
அந்த மீனுக்கே...

கடல் நீர் எல்லாம் உப்பால்
செறிந்ததாலோ என்னவோ
இவனின் கண்ணீரின் விலை கடல்
அன்னைக்கு தெரியாமலே போய்விட்டது.

எழுதியவர் : எம். ஏ. அஷ்ரப் ஹான் (9-Mar-14, 10:35 pm)
Tanglish : meenavan
பார்வை : 1493

மேலே