தீவாய் நீ

தன்னை முன்னிலை படுத்தி
அடையாளம் தேடி கொள்ளும்
அறிவிலிகள் பலர் உண்டு
சமூக சிந்தனை
பெண்ணீயம்
புரட்சி இலக்கியம்
என்றெல்லாம் முழங்கிகொண்டு
துதி பாடி புகழ் தேடி
விலை கொடுத்து
புகழ் வாங்கி
தானே புரட்சியின் விதை
தானே சமூகம்
தானே இலக்கியத்தின் சிற்பி
என்றெல்லாம் தன்னை
தனித்துகாட்டி காட்டி
தனித் தீவாய் நிற்கும்
அந்த முரட்டு கலைஞர்களை
எந்த கலை முத்தமிடும்....

எழுதியவர் : சித்ரா ராஜ் (9-Mar-14, 10:41 pm)
சேர்த்தது : சித்ராதேவி
பார்வை : 110

மேலே