காமிரா பூக்கள் - பூவிதழ்
இன்று
தரம் கேட்டுப்போனதோ
அந்தரங்கம் !
ருசித்த காமம்
பசித்தபோதேல்லாம்
வஞ்சனைப்பஞ்சனைகள்
வாசித்த கவிதைகள் !
கணிந்தகாதல்
கசந்தபோதேல்லாம்
காரியஉமிழ்நீராய்
கசிந்துவிடுகிறது
உரிய விலாசத்துடனே !
உண்மைக்காதலும்
உரசிப்பார்க்கும் போதேல்லாம்
காமம்தின்றகாதல்
வடித்த பாக்கள்
வலைப்பக்கங்களில் !
விரியத்தொடங்குகிறது
வியுவர்களின் விழிகளுக்கு
விலையில்லாமல்
காமிரா பூக்களாய் !

