வெங்காயம்

பாஞ்சாலியின் பாச பிணைப்போ நீ?
கண்ணன் நல்கிய கனிவான வரத்தை
உனக்கும் தந்து உதவுகிறாள் போலும்
அதனால்தான்
துச்சாதனன் போல நான் துகில் உரிய உரிய
வந்தது பல!
என் கண்களில் துளி நீர் சில!

எழுதியவர் : (10-Mar-14, 5:14 pm)
Tanglish : vengaayam
பார்வை : 118

மேலே