வீ. நாகராஜன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வீ. நாகராஜன் |
இடம் | : |
பிறந்த தேதி | : 13-Oct-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 109 |
புள்ளி | : 17 |
குறு குறு பார்வையான் கதிரவன் கண்களிலிருந்து
நிலமங்கை மழை நீராடுவதை மறைக்க
காலையிலே திரையிட்டது கருமேகங்கள்!
சிதறிய வெண்பஞ்சுகளை கண்களால்சிறைபிடித்து
சிரத்தையாக சமைத்த வெண்புரவியின் சித்திரத்தை
சில நொடிகளிலே சிதைப்பதுதான் வேலை போல
இந்த சிடுமூஞ்சி வருணனுக்கு!
உலகின் உயிர்களுக்கு உணவளிக்கும்
சூரியன் கூட சுய ஒளியை இழந்து தவித்தது
குளிர் கருமேகத்துடன் கொண்ட காதலால்!!!
மந்திரம் செய்யும் மாயச் சூரியன்!!!
சுட்டெரிக்கும் சுடர் கொண்டு
கண நேரத்தில் என் கண்களை ஏமாற்றி
காற்றை நீராக மாற்றுகிறான்
தொடுவானம் தொட்ட செந்நிற பந்து
நீலக்கடலில் நீந்த ஆசைப்பட்டு
நீந்தத்தெரியாமல் நிலைகுலைந்து
மெல்ல மெல்ல முழுகிக்கொண்டிருந்தது
குறை கண்டு சிறை சென்றேன்
அவள் ஹீமோகுளோபின் குறைகண்டு
மாயச் சிறை சென்றேன்....
இயற்கை
செழிப்பாக இருக்கிறது
கணினித் திரைகளில் !
==
மாணவர்கள்
தவறாது படிக்கிறார்கள்
முகநூல் !
==
சொந்த வீடுகளே
முதியோர் இல்லங்கள் தான்
வெளிநாட்டில் பிள்ளைகள் !
==
குளிராக்கி அறை
வியர்வைக் கவிதைகளில்
உப்பிருக்காது !
=======
வந்து வந்து போகும்
அகதி முகாம் வேலிகளில்
வெளிச்சம் ! ------------------ (ஹைக்கூ)