இதழுதிர் பூக்கள் - கே-எஸ்-கலை

இயற்கை
செழிப்பாக இருக்கிறது
கணினித் திரைகளில் !
==
மாணவர்கள்
தவறாது படிக்கிறார்கள்
முகநூல் !
==
சொந்த வீடுகளே
முதியோர் இல்லங்கள் தான்
வெளிநாட்டில் பிள்ளைகள் !
==
குளிராக்கி அறை
வியர்வைக் கவிதைகளில்
உப்பிருக்காது !
=======
வந்து வந்து போகும்
அகதி முகாம் வேலிகளில்
வெளிச்சம் ! ------------------ (ஹைக்கூ)