மூங்கில் பூ - கே-எஸ்-கலை

மூங்கில் பூக்களை
யாரும் பாடுவதில்லை
இசையின் ஆதிக்கம் !
==
கோவிலில் தேவிக்குப் பூசை
அதில் ஊமத்தம் பூவுக்கேன் ஆசை
பூக்களிலும் தீண்டாமை !
==
சமூக நோய்களில்
இரண்டாமிடம் எய்ட்ஸ்க்கு
முதலிடம் காதலுக்கு !
==
ஆணினம் அழகானது
பெண்கள் சொல்லமாட்டார்கள்
பறவைகள் பாசை புரியாது !

===============

குட்டி குட்டி எறும்புகள்
மொய்த்துக் கொண்டிருக்கும்
காலையில் கன்னத்தில் ! (ஹைக்கூ)

எழுதியவர் : கே.எஸ்.கலை (15-Mar-14, 9:53 am)
பார்வை : 447

மேலே