உலக அழகி

எல்லாருக்கும் வணக்கம்.என் பேரு லிஸ்ஸி. நான் அமெரிக்கா பொண்ணு. எனக்கு தமிழ் தெரியாது.அதனால தமிழ்ல தப்பு இருந்தா என்னை திட்டக் கூடாது உங்க தோழி சரண்யாவ தான் திட்டணும் சொல்லிட்டேன்.
சரி இப்போ என் கதைக்கு வருவோம். நான் தான் என் வீட்டுக்கு முதல் பொண்ணு.9 மாசத்தலயே பொறந்துட்டேன். அதனால தான் என்னவோ தெரியல பொறந்ததுலே இருந்து எனக்கு இப்படி ஒரு விசித்திரமான வியாதி இருக்கு.
உங்க ஊர் படங்கள்ல ஹீரோ ஹீரோயினுக்குலாம் வரும்ல அதிசயமான வியாதிகள்.அது மாதிரி ஒண்ணுதான் எனக்கும் இருக்கு.இது வரைக்கும் உலகத்துலயே மூணு பேருக்கு தான் அந்த நோய் வந்திருக்காம்.அதுக்கு என்ன பேர்னுலாம் கேக்காதீங்க.விவரத்த சொல்றேன் கேட்டுக்கோங்க.
எனக்கு உடம்புல சுத்தமா கொழுப்பே கெடையாது.திமிர்னு நெனைக்காதீங்க. கொழுப்புச்சத்து னு சொல்வாங்கல அது.அதனால என்னனு கேக்கறீங்களா?
25 வயசு ஆச்சு.ஆனா என் உடம்பு எடை இதுவரைக்கும் 29 கிலோவை தாண்டனதில்ல. நாலு வயசிலிருந்து ஒரு கண் தெரியரதில்ல.பார்க்க எல்லாரையும் விட வித்தியாசமா இருப்பேன்.உங்க மொழியில சொல்லணும்னா அசிங்கமா..அப்படிதான் சொன்னாங்க எல்லாரும்.
அப்போ நான் பள்ளியில் படிச்சிட்டிருந்தேன். உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்.எங்க ஊர் youtube பத்தி.அதுல தான் முதல்ல எனக்கு கொடுத்தாங்க 'உலகத்துலயே அசிங்கமான பொண்ணு'ன்ற பட்டத்த.ரொம்ப கொடூரமான விஷயம் அது.
அதுக்காக நான் என்னைக்கும் மனசு ஒடிஞ்சது இல்ல.அழகுன்றது நீங்க பார்க்கிற பொருள்ல இல்ல.உங்க பார்வையில இருக்கு. நான் என்னைக்குமே எனக்கு அழகு தான்.
சரி நான் கெளம்பறேன்.புரியுது.இப்போ நான் என்ன பண்றேனு தானே கேக்கறீங்க.தன்னம்பிக்கையோட வாழறது எப்படினு இரண்டு புத்தகம் எழுதியிருக்கேன்.தன்னம்பிக்கை பேச்சாளாரா இருக்கேன்.அழகான கணவர் இருக்கார்.ஒரு குழந்தை இருக்கு..இதுக்கு மேல என்ன வேணும் சொல்லுங்க...